கொலையில் முடிந்த வாய் பேச்சு: 6 பேர் கொண்ட கும்பல் நடத்திய கொடூரம்..!
வாய் தகராறு காரணமாக கண்ணகி நகரில் இளைஞர் ஒருவரை ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விமல்(23). பெயிண்டராகவும், ஞாயிற்றுக்கிழமையானால் இறைச்சிக்கடையும் நடத்தி வந்தார். இரு தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது விமல் நடனம் ஆடியுள்ளார். அப்போது ஒரு தரப்பினற்கும் விமலுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விமலை கொலை செய்ய அந்த கும்பல் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று இரவு 8:30 மணி அளவில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த விமலை கண்ணகிநகர் பகுதியை சேர்ந்த நண்பன் மோஜோ(18), மது அருந்த ஏரிக்கரை அருகே கூட்டிச் சென்றுள்ளார். மது அருந்திய பின்னர் 6 பேர் கொண்ட கும்பல் விமலை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிஓடி விட்டனர்.
தகவல் அறிந்த கண்ணகி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விமலின் உடலை மீட்டு இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை நடந்தவுடன் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க கண்ணகி நகர் பகுதியில் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விமலின் தந்தை வீரய்யன் கொடுத்த புகாரின் பேரில் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்துள்ள கண்ணகி நகர் போலீசார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். கொலை தொடர்பாக கல்லூரி மாணவன் மோஜோ(18), பிரவீன்(18) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.