\
வேலூர்: பிச்சைக்காரர்களுக்குள் தகராறு - ஒருவர் கொலை

வேலூர்: பிச்சைக்காரர்களுக்குள் தகராறு - ஒருவர் கொலை

வேலூர்: பிச்சைக்காரர்களுக்குள் தகராறு - ஒருவர் கொலை
Published on

குடிபோதையில் பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பிச்சைக்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஒருவரை கைது செய்து மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் பிச்சை எடுத்து வந்திருக்கிறார் தயாநந்தகிரி. இவருக்கும் அதே பகுதியில் பிச்சை எடுத்து வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த பாபுராஜ் மற்றும் அவருடைய நண்பர் தனிப்பல் என்பவர்களுக்கும் குடிபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் அப்பகுதியில் மாஸ்க் விற்பனை செய்து கொண்டிருந்த விக்ரம் சிங் என்பவர் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். அச்சமயம் பாபுராஜ், தான் வைத்திருந்த கத்தியால் தயாநந்தகிரியின் மார்பு பகுதியிலும், நெற்றிப் பகுதியிலும் குத்தி உள்ளார்.

இதனால், படு காயமடைந்த தயாநந்தகிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து மாஸ்க் விற்பனையாளர் விக்கிரமசிங்க அளித்த புகாரின் பேரில் காட்பாடி காவல்துறையினர் நேரில் சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட பாபுராஜை(வயது 48) கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தனிப்பல் என்பவரை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com