\
வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது
Published on

சென்னை திருவொற்றியூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவொற்றியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரது வீட்டிலிருந்து கடந்த 14 ஆம் தேதி, 52 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக சாத்தாங்காடு காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர். சிசிடிவி காட்சியில் கொள்ளையன் மழை கோட் அணிந்திருந்தது தெரியவந்தது.

அதனை வைத்து திருவொற்றியூர் முதல் ராயப்பேட்டை வரை இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, கொள்ளையனின் இருசக்கர வாகனப் பதிவை கண்டறிந்தனர். தொடர் விசாரணையில் கொள்ளையன் சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் 26 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com