\
வணிகரை மிரட்டி ரூ10 லட்சம் பறித்த புகார் - காவல் ஆய்வாளர் வசந்திக்கு ஒருநாள் போலீஸ் காவல்

வணிகரை மிரட்டி ரூ10 லட்சம் பறித்த புகார் - காவல் ஆய்வாளர் வசந்திக்கு ஒருநாள் போலீஸ் காவல்

வணிகரை மிரட்டி ரூ10 லட்சம் பறித்த புகார் - காவல் ஆய்வாளர் வசந்திக்கு ஒருநாள் போலீஸ் காவல்
Published on

மதுரையில் வணிகரை மிரட்டி 10 லட்ச ரூபாய் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இளையான்குடியைச் சேர்ந்த வணிகரிடம் காவல் ஆய்வாளர் வசந்தி பணம் பறித்ததாக வணிகர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தலைமறைவான வசந்தி ஆகஸ்ட் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வசந்தியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை மனுதாக்கல் செய்தது.

மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வசந்தி நேரில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வசந்திக்கு ஒருநாள் போலீஸ் காவல் விடுத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com