\
ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் - ஆந்திரா போலீசார் நடவடிக்கை

ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் - ஆந்திரா போலீசார் நடவடிக்கை

ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் - ஆந்திரா போலீசார் நடவடிக்கை
Published on
சென்னை அருகே மர சாமான்கள் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை ஆந்திர காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் தொடர்புடைய சுரேந்தர் என்பவரை அம்மாநில காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆந்திராவில் வெட்டப்பட்ட செம்மரங்கள் சென்னை மணலியை அடுத்த விச்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மரச்சாமான் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மணலி விரைந்த ஆந்திர காவல்துறையினர் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 170 செம்மரகட்டைகளை பறிமுதல் செய்தனர். கிடங்கு உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com