\
வடமாநில தொழிலாளி கைது
வடமாநில தொழிலாளி கைதுpt desk

ஈரோடு: ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஒருவர் கைது

ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வடமாநில தொழிலாளியை இருப்புப்பாதை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பெண் ஒருவர், சேலத்தில் இருந்து புனே - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சூருக்கு முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்துள்ளார். அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மதாப் சர்கார் என்பவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது.

Police station
Police stationpt desk

இதுகுறித்து அந்தப் பெண் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மதாப் சர்கார் என்பவரை கோவை ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

வடமாநில தொழிலாளி கைது
மதுரை| 1997-ல் ரூ.60 வழிப்பறி செய்து தலைமறைவான நபர்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது! எப்படி சிக்கினார்?

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் இமெயில் மூலம் புகார் அளித்ததை அடுத்து ஈரோடு இருப்புப்பாதை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மதாப் சர்காரை கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com