செயின் பறிப்பில் ஈடுபடும் முதியவர் - பொதுமக்கள் அச்சம்

செயின் பறிப்பில் ஈடுபடும் முதியவர் - பொதுமக்கள் அச்சம்

செயின் பறிப்பில் ஈடுபடும் முதியவர் - பொதுமக்கள் அச்சம்
Published on

வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்கூட்டியில் வந்து வயதானவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் முதியவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வளசரவாக்கம் பகுதியில் வேட்டி, சட்டை, நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டு ஸ்கூட்டியில் வரும் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தனியாக நடந்து செல்லும் வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளசரவாக்கத்தில் நடந்து சென்ற 74 வயதான பெண் லட்சுமியிடம் 4 பவுன் நகையை அந்த முதியவர் பறித்துக் கொண்டு சென்றுவிட்டார். செயினை பறித்த வேகத்தில் அதனை வாயில் லாவகமாக கவ்விக்கொண்டு ஸ்கூட்டியில் வேகமாக சென்று விடுகிறார் அந்த முதியவர். மூதாட்டி தன் செயின் பறிபோனதை உணர்ந்து கத்துவதற்குள் அவர் நெடுதூரம் சென்று விடுகிறார்.

பொதுவாகவே செயின் பறிப்பு சம்பவங்களில் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் தான் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது முதியவர் ஒருவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் செயின் பறிப்பு சம்பவத்தில் பதிவான காட்சிகளில் பதிவான ஸ்கூட்டியின் நம்பர் மற்றும் அந்த முதியவரின் உருவத்தை வைத்து தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். முதியவராக இருப்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டால் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் சந்தேகம் வராது. போலீசிடமும் சிக்காமல் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் இதுபோல் செயின் பறிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிகிறது.

தகவல்கள்: நவீன், செய்தியாளர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com