\
செவிலியரை தாக்கிய வழக்கறிஞர் - பெண்வன்கொடுமை தடுப்புச்சட்டம் பாய்ந்தது

செவிலியரை தாக்கிய வழக்கறிஞர் - பெண்வன்கொடுமை தடுப்புச்சட்டம் பாய்ந்தது

செவிலியரை தாக்கிய வழக்கறிஞர் - பெண்வன்கொடுமை தடுப்புச்சட்டம் பாய்ந்தது
Published on

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செவிலியர் தாக்கப்பட்ட சம்பவத்தில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அரசு புறநோயாளிகள் மருத்துவமனையில் மகாலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். 5-ம்தேதி இந்த மருத்துவமனைக்கு வந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சண்முகம் அங்கிருந்த செவிலியர் மகாலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக தெரிகிறது. அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சண்முகம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மற்ற செவிலியர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து வழக்கறிஞர் சண்முகம் கைது செய்யப்பட்டார். சிறையிலடைப்பதற்கு அழைத்துச்சென்ற போது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டேன்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com