உ.பி: திருமண சமையலின்போது ரொட்டியில் எச்சில் துப்பிய நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சமைக்கும் போது, ரொட்டியில் எச்சில் துப்பியதாக கைது செய்யப்பட்ட நபர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீரட்டில் நடந்த ஒரு திருமணத்தில் தந்தூரில் சமைப்பதற்கு முன்பு, ரொட்டி மீது எச்சில் துப்பிய சோஹைலை, ஒரு நபர் ரகசியமாக படமாக்கியதால் 2021 பிப்ரவரியில் நடந்த இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானவுடன், இந்த காட்சிகள் மீது "வெறுப்படைந்த" நெட்டிசன்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்து, இந்த விவகாரத்தை விசாரிக்க போலீஸை வலியுறுத்தினர்.
அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து, தற்போது அவர் கைது செய்யப்பட்டார். அந்த நபரின் குடும்பத்தினர் அண்மையில் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும், சோஹைல் மீது தாக்குதல் நடத்தப்படும் என பயந்து, நீதித்துறை நிர்வாகம் அவரை விடுவிக்க விரும்பவில்லை.
கைது செய்யப்பட்டபின் ஒரு விசாரணைக்கு வந்தபோது, சிலர் சோஹைலைத் தாக்கினர். அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அது மீண்டும் நிகழக்கூடும் என்ற அச்சத்தில், அவருக்கு எதிராக என்.எஸ்.ஏ வழக்கு பதிவுசெய்யப்பட்டது.