சென்னை: சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் நள்ளிரவில் கத்திமுனையில் வழிப்பறி!

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஃரைட்ரிச் வின்சென்ட் (23) என்ற வாலிபர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
Crime
Crime File picture

சென்னைக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு இளைஞரிடம் கத்தி முனையில் அவரது லேப்டாப் மற்றும் லக்கேஜ் பேக்கை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Murder
MurderFreepik

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஃரைட்ரிச் வின்சென்ட் (23) என்ற வாலிபர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 24 ஆம் தேதி இலங்கை வழியாக விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். பின்னர் கால் டாக்ஸி மூலம் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பத்தில் உள்ள விடுதிக்கு செல்லும் போது விடுதியின் அருகே உணவு அருந்துவதற்காக இறங்கியுள்ளார்.

இரவு ஒரு மணிக்கு சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி ஜெர்மன் வாலிபரிடம் லக்கேஜ்பேக் மற்றும் லேப்டாப்பை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பின்னர் சாலையில் சென்றவர்களிடம் உதவிக்கேட்ட பாதிக்கப்பட்ட நபர், கோயம்பேடு காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கு புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Valasaravakkam Police station
Valasaravakkam Police station

அங்கு அவரை விசாரணை செய்து பின்னர் அவர் தங்கி இருந்த விடுதியில் தங்க வைத்தனர். வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்த வாலிபரிடம் கொள்ளையடித்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com