\
நீலகிரி: 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர் போக்சோவில் கைது

நீலகிரி: 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர் போக்சோவில் கைது

நீலகிரி: 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர் போக்சோவில் கைது
Published on

பந்தலூரில் 11ஆம் வகுப்பு மாணவியை 8 மாத கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள மேங்கோ ரேஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான முதியவர் சுதாகர். இவர் அதே பகுதியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார். இதில் மாணவி 8மாத கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். மருத்துவர் பரிசோதித்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பதை அறிந்து, தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியின் நிலைக்கு முதியவர் சுதாகர் காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com