புத்தாண்டு கொண்டாட்டம்: போக்குவரத்து விதிகளை மீறியதாக 932 வாகனங்கள் பறிமுதல்

புத்தாண்டு கொண்டாட்டம்: போக்குவரத்து விதிகளை மீறியதாக 932 வாகனங்கள் பறிமுதல்
புத்தாண்டு கொண்டாட்டம்: போக்குவரத்து விதிகளை மீறியதாக 932 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிகளை மீறியதாக 932 வாகனங்களை பறிமுதல் செய்த நிலையில், குடித்து விட்டு வாகனம் ஒட்டிய 360 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து நேற்றிரவு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்த போலீசார், 572 வாகனங்களை என மொத்தம் 932 வாகனங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கடந்த 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 694 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து வாகனங்களும் நாளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிய வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com