900 ரூபாய்க்காக இளைஞர் கொலை - விசாரணையில் முதியவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

900 ரூபாய்க்காக இளைஞர் கொலை - விசாரணையில் முதியவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

900 ரூபாய்க்காக இளைஞர் கொலை - விசாரணையில் முதியவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
Published on

பணகுடியில் நேற்று பசுமதி என்ற இளைஞர் பாழடைந்த வீட்டுக்குள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

நெல்லை மாவட்டம் பணகுடி ராமலிங்க சுவாமி கோவில் பின்புறம் உள்ள கோயில் ஊழியர்களின் குடியிருப்பில் பாழடைந்த நிலையில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டின் உள்ளே நேற்று பணகுடி யாதவர் தெருவைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் பசுபதி (24) முகத்தில் காயங்களோடு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பணகுடி போலீசார் உடலை கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராகளையும் சோதனை செய்து விசாரணை நடத்தினர். இதில் பசுமதியை பணகுடியைச் சேர்ந்த கணேசன் (58) என்பவர் அழைத்துச் செல்வது தெளிவாக தெரிந்தது.

இதையடுத்து கணேசனை பணகுடி போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரை தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது, பசுபதியும் கணேசனும் ஒன்றாக மது அருந்தியதாகவும், பின்பு பசுமதி கணேசனிடமிருந்து 900 ரூபாயை திருடி விட்டதாகவும் பலமுறை கேட்டும் திரும்ப கொடுக்காத ஆத்திரத்தில் அவனை குடிக்கலாம் வா என்று அழைத்து சென்று துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கணேசனிடம் பணகுடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com