\
மனைவியை குத்திய கணவன்: தடுக்காமல் வீடியோ எடுத்த அக்கம்பக்கம்!

மனைவியை குத்திய கணவன்: தடுக்காமல் வீடியோ எடுத்த அக்கம்பக்கம்!

மனைவியை குத்திய கணவன்: தடுக்காமல் வீடியோ எடுத்த அக்கம்பக்கம்!
Published on

கணவன், மனைவியை கத்தியால் குத்திய சம்பவத்தை வீடியோ எடுப்பதிலேயே அக்கம் பக்கத்து வீட்டினர் குறியாக இருந்த சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.

ஹரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ளது பரோலி கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு. இவர் கணவர் நரேஷ். அடிக்கடி போதையில் இருக்கும் நரேஷூக்கு மனைவி மீது சந்தேகம். கடந்த 30-ம் தேதி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதை அடுத்து சஞ்சுவின் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவினார். பின்னர் வயிறு, தோள்பட்டை, மூட்டு பகுதியில் கத்தியால் வெட்டினார். இதனால் வலியால் கதறினார் சஞ்சு. அதற்குள் நரேஷ் ஓடிவிட்டார். 
இதையடுத்து அங்கு கூடிய அக்கம் பக்கத்து வீட்டினர் அந்த பெண்ணுக்கு உதவாமல் செல்போனில் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்துள்ளனர். பின்னர் அங்குள்ள ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்தபின்னும் வீடியோ எடுப்பதிலேயே அவர்கள் குறியாக இருக்க, போலீஸ் அதிகாரி ஒருவர் அவர்களை திட்டினார். வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு கூறியதை அடுத்து, நிறுத்தினர். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் நரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com