”துபாய்ல தவிக்க விட்டுட்டு போயிட்டாரு; காசே இல்ல” - நவாசுதீனால் சிக்கி கண்ணீர் விடும் பெண்

”துபாய்ல தவிக்க விட்டுட்டு போயிட்டாரு; காசே இல்ல” - நவாசுதீனால் சிக்கி கண்ணீர் விடும் பெண்
”துபாய்ல தவிக்க விட்டுட்டு போயிட்டாரு; காசே இல்ல” - நவாசுதீனால் சிக்கி கண்ணீர் விடும் பெண்

இந்திய சினிமாத் துறையில் தனித்துவமான கதாப்பாத்திரங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையே பதித்திருப்பவர் நவாசுதீன் சித்திக். இவரது திரை வாழ்க்கை சீராக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்கள் குறித்த புகார்களும் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் இறுதியின் போது நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக் மீது நவாசுதீனின் தாயார் மெஹ்ரூனிஷா போலீசில் புகார் கொடுத்திருந்தார். அது மூவருக்குமான சொத்துப்பிரச்னையால்தான் இப்படியாக புகார் கொடுத்திருப்பதாக மும்பை போலீஸ் சந்தேகித்தது.

இந்த விவகாரத்தின் தீயே இன்னும் அணையாமல் இருக்கும் நிலையில், இதனூடே மேலும் எண்ணெய்யை ஊற்றுவது போல நவாசுதீன் சித்திக்கின் வீட்டு பணிப்பெண் ஒருவர் முன்வைத்துள்ள புகாரும், குற்றச்சாட்டும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

அதன்படி, நவாசுதீனுக்கு எதிரான பல புகார்களை அடுக்கியிருக்கிறார் பணியாள் சப்னா ராபின் என்ற பெண். இது தொடர்பான வீடியோவையும் ஆலியாவின் வழக்கறிஞர் ரிஸ்வான் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். அதில், “நவாசுதீனால் துபாயில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். சேல்ஸ் மேனேஜர் எனச் சொல்லிவிட்டு, துபாயில் இருக்கும் நவாசுதீனின் குழந்தைகளை பார்க்கும் வேலைக்கு நியமித்திருக்கிறார். இங்கு நான் வாழ்வதற்கென உணவு, பணம் என எதுவும் கொடுக்காமல் சிக்கவைத்திருக்கிறார் நவாசுதீன். இன்னும் முதல் மாத சம்பளம் மட்டுமே எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.” என்றும் கண்ணீர் மல்க சப்னா வீடியோவில் பேசியதை பகிர்ந்திருக்கிறார் ரிஸ்வான்.

மேலும், “சப்னா குறித்த அவரது வீடியோவும் என்னுடைய அறிக்கையுமே என்ன நடந்தது என்பதை விவரித்திருக்கும். துபாயில் சிக்கித் தனிமை சிறையில் தவித்துக் கொண்டிருக்கும் நவாசுதீனின் பணியாள் சப்னாவை அரசு உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ரிஸ்வான் சித்திக் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com