ஆந்திராவில் இருந்து பேருந்தில் கடத்திவரப்பட்ட 4,000 போதை மாத்திரைகள் பறிமுதல் - ஒருவர் கைது

ஆந்திராவில் இருந்து பேருந்தில் கடத்தி வரப்பட்ட 4000 போதை மாத்திரைகளை தமிழக - ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல் துறையினர் பறிமுதல் செய்து அம்பத்தூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: எழில் கிருஷ்ணா

__________

தமிழக ஆந்திர எல்லை பகுதியான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நாள்தோறும் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் ஆந்திராவில் இருந்து பேருந்தில் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Narcotic pills
Narcotic pillspt desk

அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வந்த தனியார் பேருந்தை சோதனை செய்தபோது அதில், ஒரு பையில் 4000 போதை மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போதை மாத்திரைகளை கடத்தி வந்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரை கைது செய்த கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே இதுபோல் போதை மாத்திரைகள் கடத்திவரப்பட்டதா? யாருக்கு விநியோகம் செய்யப்படுகிறது? இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் யார்? என்பது குறித்து கைது செய்யப்பட்ட குப்புசாமியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com