‘கண் அசந்தோம், டயரக் காணோம்’ புலம்பும் லாரி டிரைவர்கள்!

‘கண் அசந்தோம், டயரக் காணோம்’ புலம்பும் லாரி டிரைவர்கள்!
‘கண் அசந்தோம், டயரக் காணோம்’ புலம்பும் லாரி டிரைவர்கள்!

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் டயர்களை திருடிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் நகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் டயர்கள் காணமால் போவது, தொடர்கதையாக இருந்து வந்தது. புதிய டிரைவர்கள் வந்தாலோ அல்லது டிரைவர்கள் லாரியை நிறுத்திவிட்டு தூங்குவதற்காக கண் அசந்தாலோ டயர்கள் திருடு போய்விடும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. 

இந்நிலையில் தொடர்ந்து டயர்களை திருட்டில் ஈடுபட்டு வந்த 9 பேரை நல்லிப்பாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயர்கள் பறிமுதல் செய்தனர். எர்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சரக்கு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட லாரியை பரிசோதித்த போது திருடர்கள் பிடிபட்டனர். அத்துடன் டயர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பறிமுதல் செய்யப்பட்டன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com