”எங்களுக்கு பார்மால்டி பண்ணுங்க”.. மருந்து கடையில் ஆய்வாளர் போல் மாமூல் கேட்ட போதை ஆசாமி!

”எங்களுக்கு பார்மால்டி பண்ணுங்க”.. மருந்து கடையில் ஆய்வாளர் போல் மாமூல் கேட்ட போதை ஆசாமி!
”எங்களுக்கு பார்மால்டி பண்ணுங்க”.. மருந்து கடையில் ஆய்வாளர் போல் மாமூல் கேட்ட போதை ஆசாமி!

நாமக்கல்லில் பணம் கேட்டு மிரட்டிய போலி மருந்து ஆய்வாளர், காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் நகராட்சி சேலம் சாலை முனையில் இயங்கி வந்த தனியார் மருந்து கடையில் நேற்று இரவு டிப்டாப்பாக நபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது கடை உரிமையாளரிடம் அந்த நபர் தான் மருத்து ஆய்வாளர் ( DRUG INSPECTOR ) என்றும் தனக்கு வழங்க வேண்டிய (பார்மால்டி பன்னுங்க ) லஞ்சம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். மேலும் அந்த நபர் குடிபோதையில் இருந்துள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த மருந்து கடை உரிமையாளர் சந்தேகமடைந்தையடுத்து அவரை மடக்கி பிடித்து நாமக்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜராஜன் என்பதும் மது வாங்க பணம் இல்லாததால் மருந்து ஆய்வாளர் எனக்கூறி வசூலில் ஈடுபட முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும் போலி மருந்து ஆய்வாளர் குடிபோதையில் இருந்தால் அவரிடம் முகவரி உள்ளிட்ட விபரங்களை மற்றும் சேகரித்து கொண்டு அப்போது வீட்டுக்கு அனுப்பினர். போலி மருந்து ஆய்வாளர் மீது எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் போலீசார் வீட்டுக்கு அனுப்பியதால் மருந்து கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com