ஃபேஸ்புக் உரையாடல்.. வீடியோகால் ரெக்கார்டிங்... பண மோசடியில் ஈடுபட்ட பெண்..!

ஃபேஸ்புக் உரையாடல்.. வீடியோகால் ரெக்கார்டிங்... பண மோசடியில் ஈடுபட்ட பெண்..!
ஃபேஸ்புக் உரையாடல்.. வீடியோகால் ரெக்கார்டிங்...  பண மோசடியில் ஈடுபட்ட பெண்..!

தனியார் நிறுவன ஊழியரை  வீடியோ காலில் நிர்வாணமாக வீடியோ எடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


சென்னை தி.நகர் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார். நீண்ட நாள் பேஸ்புக்கில் சேட் செய்த இவர்கள் வேறொரு செயலி மூலம் இணையதளத்தில் நேரலையில் நிர்வாணமாக உரையாடியுள்ளனர். இதில் அதிகாரியின் நிர்வாண வீடியோவை பதிவு செய்த அந்தப் பெண்மணி, வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி பெண்ணின் வங்கிக்கணக்கில் 80,000 ரூபாய் செலுத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து வீடியோவை வைத்து மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அதிகாரி பாண்டிபஜார் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் பாண்டிபஜார் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com