நாகர்கோவில்: தபால் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சுசீந்திரம் பகுதியை சேர்ந்த அசோக் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்
தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்புதிய தலைமுறை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகே தலைமை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.

தபால் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம்
தபால் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம்புதிய தலைமுறை

அவர் அனுப்பிய கடிதத்தில் தபால் நிலையத்திற்கு வந்துள்ள பார்சலில் வெடிகுண்டு இருப்பதாகவும் விரைவில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தபால் துறை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் அளித்தனர்.

அப்புகாரின் அடிப்படையில், போலீசார் மோப்பநாயான காஸ்பர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவி ஆகியவற்றுடன் விரைந்து சென்று தபால் நிலைய அலுவலகத்தில் பல்வேறு இடங்களில் சோதனையிட்டனர். தபால் நிலையத்திற்கு வந்திருந்த தபால் உறைகள், பார்சல்கள் அனைத்தையும் தனித்தனியாக நேற்று முழுவதும் சோதனை செய்தனர். எனினும் வெடிகுண்டு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் தபால் நிலைய பணிகள் வழக்கம் போல் இன்று நடைபெற தொடங்கின.

தபால் நிலையம்
தபால் நிலையம்

இருப்பினும் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இந்த கடிதத்தை அனுப்பியது யார், எங்கிருந்து அனுப்பப்பட்டது, எதற்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து நேற்று தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அசோக் (45) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

மிரட்டல் விடுத்த அசோக்
மிரட்டல் விடுத்த அசோக்

கைது குறித்து போலீஸ் கூறுகையில், “இவர் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர். இவர் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அவரை பணியில் இருந்து நீக்கியதால் விரக்தியில் தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்” என்றனர். தொடர்ந்து இவரை கைது செய்து வடசேரி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com