\
போக்சோ வழக்கில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரியை கைது செய்ய பெற்றோர் கோரிக்கை

போக்சோ வழக்கில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரியை கைது செய்ய பெற்றோர் கோரிக்கை

போக்சோ வழக்கில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரியை கைது செய்ய பெற்றோர் கோரிக்கை
Published on

வேதாரண்யம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரியை கைது செய்யாததால் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர்.

நாகை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் சாலை தர ஆய்வு அதிகாரி சிவாஜி ராஜா என்ற சிவாஜி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அதிர்ச்சி அடைந்த அவர்கள் வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 9-ஆம் தேதி புகார் அளித்தனர். புகாரை பெற்ற வேதாரண்யம் போலீசார், சிவாஜி ராஜா என்ற சிவாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து 1 மாதமாகியும் போலீசார் அவரை இதுவரை கைது செய்யவில்லை.

இதைத்தொடர்ந்து சிவாஜி-க்கு நெருங்கிய உறவினர்கள் வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி சிறுமியின் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இன்று நாகை மாவட்ட ஆட்சியரிடம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரியை கைது செய்ய வேண்டுமென புகைப்படத்துடன் புகார் அளித்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரி, சிறுமியை புகைப்படம் எடுத்து மிரட்டுவதாகவும், அரசு அதிகாரி என்பதால் போலீசார் கைது செய்ய தயங்குவதாகவும், குற்றம்சாட்டியுள்ள சிறுமியின் பெற்றோர், உடனடியாக அவரை கைது செய்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com