கொள்ளையடித்த லாக்கரை அரை கிலோ தங்கத்தோடு குப்பைத்தொட்டியில் வீசிய நபர்கள்: ஏன் தெரியுமா?

கொள்ளையடித்த லாக்கரை அரை கிலோ தங்கத்தோடு குப்பைத்தொட்டியில் வீசிய நபர்கள்: ஏன் தெரியுமா?

கொள்ளையடித்த லாக்கரை அரை கிலோ தங்கத்தோடு குப்பைத்தொட்டியில் வீசிய நபர்கள்: ஏன் தெரியுமா?
Published on

மதுரையில் அடகுக்கடையில் கொள்ளையடித்துவிட்டு நகை லாக்கரை குப்பையில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை ஆத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர், புதூர் அருகேயுள்ள ஜவஹர்புரம் பகுதியில் விசாலாட்சி என்ற பெயரில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை திறக்கப்படாத நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நகை லாக்கர் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த புதூர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அடகுக்கடைக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டியில் நகை லாக்கர் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நகை லாக்கரை மீட்ட காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த மர்ம நபர்களால் லாக்கரை உடைக்கமுடியாத நிலையில் லாக்கரை ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் லாக்கரில் அரை கிலோ தங்க நகை மற்றும் 21 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் இருந்தது தெரியவந்துள்ளது. கொள்ளையடித்த லாக்கரை உடைக்க முடியாமல் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com