நாகை: நாய்க்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு மூதாட்டியை மிரட்டி நகை, பணம் கொள்ளை!

நாகை: நாய்க்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு மூதாட்டியை மிரட்டி நகை, பணம் கொள்ளை!
நாகை: நாய்க்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு மூதாட்டியை மிரட்டி நகை, பணம் கொள்ளை!

வேதாரண்யம் அருகே நாய்க்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு மூதாட்டி கழுத்தில் கத்திவைத்து மிரட்டி 7 சவரன் நகை, பத்தாயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செண்பகராயநல்லூர் மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கல்யாணி. இவர் கணவர் இறந்த நிலையில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் கல்யாணி வளர்த்து வந்த நாய்க்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

அப்போது தூங்கி கொண்டிருந்த கல்யாணியின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டி பீரோவை உடைத்து 7 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com