சோலோ ரவுடியாவதே எனது லட்சியம்: ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞரை தேடும் போலீசார்

சோலோ ரவுடியாவதே எனது லட்சியம்: ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞரை தேடும் போலீசார்
சோலோ ரவுடியாவதே எனது லட்சியம்: ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞரை தேடும் போலீசார்

சோலோவா ரவுடியாவதே எனது லட்சியம் என்று கானா பாட்டுடன் விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலை வளாகத்தில் இருந்து வீடியோ எடுத்து இளைஞர் பதிவிட்ட டரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் அருகே வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அசோக் (20) என்பவர் பதிவிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோலோவா ரவுடியாவேன், எல்லா போலீஸ் ஸ்டேஷனிலும் எனது பெயர் ரவுடி லிஸ்டில் இருக்கும் என்பது போன்ற வரிகளைக் கொண்ட கானா பாடல் பின்னிசையில் உருட்டுக்கட்டை, டியூப் லைட் போன்றவற்றால் ஒருவரை தாக்கி விட்டு சிறை சென்று விட்டு கெத்தாக வெளியே நடந்து வருவது போன்று வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோவில் உச்சக்கட்டமாக விழுப்புரம் அருகே வேடம்பட்டு என்ற இடத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்ட சிறை வளாகத்தில் இருந்து சட்டை காலரை தூக்கி விட்டபடி ஸ்டைலாக நடந்து வருவது போல அந்த இளைஞர் டிக்டாக் செய்துள்ளார். தற்போது இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலை வளாகத்திலேயே இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சர்ச்சை வீடியோ வெளியிட்ட அந்த இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com