அறையில் தங்கி இருந்தவர் மர்மக் கொலை?: உடன் இருந்த பெண் எங்கே?

அறையில் தங்கி இருந்தவர் மர்மக் கொலை?: உடன் இருந்த பெண் எங்கே?

அறையில் தங்கி இருந்தவர் மர்மக் கொலை?: உடன் இருந்த பெண் எங்கே?
Published on

திருப்பதி கோவிந்தராஜா சுவாமி கோயில் எதிரே தனியார் விடுதியில் இன்று அதிகாலை இளைஞரை கொலை செய்து விட்டு தப்பி சென்ற இளம் பெண்னை போலீசார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய டி.எஸ்.பி. முனிராமைய்யா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விடுதியில் வழங்கப்பட்ட தகவலின் படி டில்லியை சேர்ந்த மோகன் மற்றும் இளம் பெண் கடந்த 4 தேதி திருப்பதிக்கு வந்து இந்த விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் நெல்லூருக்கு செல்வதாகக் கூறி சென்றவர்கள் 6 தேதி மாலை வந்து, 7 தேதி மாலை அறையை காலி செய்வதாக கூறியுள்ளனர். நேற்று இரவு அறையை காலி செய்து விட்டு சென்றவர்கள் மீண்டும் அதே விடுதிக்கு வந்து ரயில் கிடைக்கவில்லை எனவே நாளை காலை செல்வதாகக் கூறி மீண்டும் அறையில் தங்கியுள்ளனர். 

இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அறையில் இருந்த இளம் பெண் மட்டும் வெளியே வந்து, விடுதி ஊழியர்களிடம் தன்னுடைய கணவர் பின்னர் வருவார் என்று கூறி சென்றுள்ளார். இன்று அதிகாலை சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அந்தத் தம்பதிகள் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்த போது தங்கியிருந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி வந்து காவல்துறையினர் விசாரனை செய்தனர். விசாரணையில் குற்றவாளிகளின் புகைப்படம் மற்றும் ஒரு சில ஆதாரங்கள் கிடைத்தன. இவர்கள் உண்மையிலேயே கணவன் மனைவியா? அல்லது கள்ள தொடர்ப்பு வைத்து இங்கு வந்தார்களா என்றும் விசாரித்து வருகிறது காவல்துறை. இவர்கள் நெல்லூருக்கு சென்ற இடத்தில் வேறு ஒருவருடன் இருப்பது போன்ற போட்டோ ஒன்றும் கிடைத்துள்ளது. இந்தக் கொலை சம்பவம் குறித்து 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரனை செய்து வருகிறோம் என தெரிவிக்கிறார் இக்கொலை குறித்து விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் சிவபிரசாத். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com