ம.பி: இளம்பெண்ணை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு தாக்கிய தந்தை, சகோதரன் - அதிர்ச்சி வீடியோ

ம.பி: இளம்பெண்ணை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு தாக்கிய தந்தை, சகோதரன் - அதிர்ச்சி வீடியோ
ம.பி: இளம்பெண்ணை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு தாக்கிய தந்தை, சகோதரன் - அதிர்ச்சி வீடியோ

மத்தியப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை அவரது தந்தை, சகோதரன் உள்ளிட்டோர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலிராஜ்பூர் மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணமான 19 வயது பெண் கணவர் வீட்டில் இருந்து வெளியேறி உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் அப்பெண்ணை கடுமையாக தாக்கி இழுத்துச்சென்று மரத்தில் கட்டித்தொடங்கவிட்டனர். பின்னர் கிராமத்தினர் அனைவரும் வேடிக்கை பார்க்க அப்பெண்ணின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட குடும்பத்தினர் சுற்றிநின்று அவரை கம்பால் கடுமையாக தாக்குகின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் அடிப்படையில் பெண்ணின் தந்தை, சகோதரன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com