இந்து மதம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார் : திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் கைது

இந்து மதம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார் : திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் கைது

இந்து மதம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார் : திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் கைது
Published on

இந்து மதம் குறித்து அவதூறு பரப்புவதாக வந்த புகாரையடுத்து திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாரத் முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிவாஜி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், யு-டியூப் சேனலில் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் இந்துக்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 153- கலகம் செய்ய தூண்டி விடுதல், 153(ஏ)(1)- மதம் தொடர்பான விரோத உணர்ச்சியை தூண்டுதல், 295(ஏ)- மதங்களை மையப்படுத்தி குற்றத்தில் ஈடுபடுதல், 298-மதங்களை மையப்படுத்தி குற்றத்தில் ஈடுபடுதல், 505(1)-உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல், 505(2)-மிரட்டல், அவமதித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இன்று மதுரவாயல் வீட்டில் வைத்து வேலு பிரபாகரனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com