4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி
Published on

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பெண் ஒருவர் 4 குழந்தைகளுடன் விஷம் அருந்தி தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபு - சிவகாமி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 11- வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று கிருத்திகா மற்றும் கோபிகா என்ற இரண்டு மகள்களும் கபின் மற்றும் கரண் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.மேலும் பிரபு சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். 

இந்த சூழலில் கடந்த ஆறு மாத காலமாக சிவகாமிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சிவகாமி தனது வீட்டில் சுக்குகாபி வைக்கும் போது அதில் எலி மருந்தை கலந்து தானும் தனது நான்கு குழந்தைகளுக்கும் கொடுத்து குடிக்க வைத்துள்ளார். இதனையெடுத்து அவர்கள் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

மேலும் இச்சம்வம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவமனை வந்த காவல்துறையினர் விசாரணை செய்து  இச்சம்வம் குறித்து வழக்கு பதிவு செய்தனர்.மேலும் கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு தவிர்த்து வேறு ஏதாவது காரணம் உள்ளதா என காவல்துறையினர் தீவர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.  ஒரே கிராமத்தில் தாய் தனது நான்கு குழந்தைகளுக்கு விசம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com