சேலம் சீலநாயக்கன்பட்டியில், தாய் கண்ணெதிரே கல்லூரி மாணவி கடத்தப்பட்டார்.
ராஜுகோவிந்தம்மாள் என்பவரது மகள் நாமக்கலிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருந்த போது, காரில் வந்த கும்பல் ஒன்று மாணவியை கடத்திச்சென்றது. அங்கிருந்த மக்கள், காரை துரத்திச்சென்றனர். ஆனால், கார் நாமக்கல் சாலையில் வேகமாக சென்றுவிட்டது. அது போலி பதிவு எண் கொண்ட கார் எனத் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.