\
2 மகன்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

2 மகன்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

2 மகன்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
Published on: 

கடலூரில் கடன் தொல்லையால் 2 மகன்களை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய் உயிருடன் மீட்கப்பட்டார்.

கடலூர் மார்க்கெட் காலனியைச் சேர்ந்த சாய்பாபு என்ற பெண், திம்மராவுத்தன் குப்பத்திலுள்ள கிணற்றில் இன்று காலை தனது 2 மகன்களை தள்ளிவிட்டு, அவரும் குதித்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கிணற்றிலிருந்து மூவரையும் மீட்டனர். சிறுவர்கள் கோசன், கோகுல் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். தாய் சாய்பாபு மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவரிடம் குள்ளஞ்சாவடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் குழந்தைகளை கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்றதாக தாய் சாய்பாபு தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com