\
தாய் அளித்த வாக்குமூலம்: துண்டு துண்டாக வீசப்பட்ட மகனின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

தாய் அளித்த வாக்குமூலம்: துண்டு துண்டாக வீசப்பட்ட மகனின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

தாய் அளித்த வாக்குமூலம்: துண்டு துண்டாக வீசப்பட்ட மகனின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு
Published on

தேனி அருகே தாயே மகனை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவத்தில், இறந்தவரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம் கம்பம், தொட்டமாந்துறை ஆற்றுப் பகுதியில் நேற்று முன்தினம் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்டு அடையாளம் தெரியாத வகையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த கம்பம் போலீசார், விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி மூலம் கொலை செய்தவரின் வாகன எண்ணை வைத்து கொலையாளிகளை பிடித்தனர். விசாரணையில் கம்பம் மருவரசி மஹால் 15-வது வார்டை சேர்ந்த செல்வி என்பவர் தனது இரண்டாவது மகன் பாரத்துடன் சேர்ந்து, மூத்த மகன் விக்னேஷை வீட்டில் வைத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், “விக்னேஷ் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலை செய்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட தலை, கை, கால்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று கம்பம் தெற்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கை, கால்களை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் கொலையாளிகளிடம் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com