'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்

'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடக மாநிலம் வரை அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆந்திர மாநிலம் குப்பம் சட்டமன்ற உறுப்பினரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் கடிதம் ஒன்றை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.



அந்த கடிதத்தில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி ஆகிய பகுதிகள் வழியாகவும் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வழியாகவும் ஆந்திர மாநிலத்திற்கு இருசக்கர வாகனம் முதல் லாரிகள் வரை ரேஷன் அரிசி தொடர்ந்து கடத்தப்படுவதாகவும், கடந்த 16 மாதங்களில் 13 வழக்குகள் எனது குப்பம் தொகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளது என்றும், குப்பம் அருகே உள்ள குருசு என்ற இடத்தில் பொதுமக்களே தமிழகத்திலிருந்து வந்த வாகனத்தை சிறை பிடித்து குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் என்றும், தொடர்ந்து தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவது தமிழக முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலிருந்து அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com