இன்னும் நெறையா பேர் துப்பாக்கி வெச்சிருக்காங்க – கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்

இன்னும் நெறையா பேர் துப்பாக்கி வெச்சிருக்காங்க – கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்
இன்னும் நெறையா பேர் துப்பாக்கி வெச்சிருக்காங்க – கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்

குமாரபாளையம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக வடமாநில இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் வாக்குமூலத்தில், இன்னும் பல துப்பாக்கிகளை அவர்கள் வைத்திருப்பதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள எப்படி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நூற்பாலைகளில் பெரும்பாலும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களே அதிகம் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வெப்படை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மட்டும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், வால்ராசபாளையம் பகுதியில் உள்ள தனியார் நூட்பாலையில் தங்கி பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் நாட்டு ரக கைத்துப்பாக்கியை கள்ளத்தனமாக வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அறையில் தங்கி இருந்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒருவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் குமார் என்பதும் மற்றொருவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சதார் பஸ்வான் என்பதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரும் நண்பர்கள் என்றும் வட மாநிலத்திலிருந்து தமிழகம் வந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில், தங்கள் முகவரிகளை தமிழகத்திற்கு மாற்றியுள்ளனர். சதார் பஸ்வான் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் கள்ளத்தனமாக துப்பாக்கி கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து வேலை இல்லாத நேரங்களில் இந்த துப்பாக்கியை பயன்படுத்தி வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை மிரட்டி பணம் பறித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் வட மாநில இளைஞர்கள் அதிகம் உள்ளதால் அவர்களிடம் பணம் பறித்தால் வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தில் பணம் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர.; இன்னும் சிலரிடம் துப்பாக்கிகள் இருப்பதாக அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து கைது செய்த இருவரையும் எப்படி போலீசார் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைத்தனர். வட மாநில இளைஞர்கள் அதிகம் உள்ள வெப்படை பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com