மதுரை அருகே சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
மதுரை ஆத்திக்குளம் குறிஞ்சி நகர் பகுதியில் சைக்கிள் ஓட்டிகொண்டிருந்த 9 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார் ஓய்வு பெற்ற ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் ஒருவர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரவியத்தை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்துறையினர் திரவியத்திடம் விசாரணை செய்தனர். மேலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போக்சோ) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து திரவியத்தை கைது செய்துள்ளனர்.