‘எங்க தூக்கிப்போறீங்க மாமா?’ - அறியா மாணவியை சீரழித்தக் கொடூரன்!
6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள காலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னா நாயக். இவர் துமெராபாதார் என்ற பகுதியில் நடைபெற்ற தனது உறவினரின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு தனது உறவினர்கள் பலர் வந்துள்ளனர். அதே நிகழ்ச்சிக்கு ராஜூவ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பூஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தம்பதிகளும் வந்துள்ளனர். அவர்களுடன் தீபா (11) (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்ற 6 வகுப்பு படிக்கும் மகளும் வந்துள்ளார். அந்தத் தம்பதியினரிடம் வந்து முன்னா நலம் விசாரிக்க, உறவினர் என்பதால் அவர்களும் நலம் விசாரித்து நன்றாக பேசியுள்ளனர்.
நிகழ்ச்சி நடக்கும் போது அவ்வப்போது வேடிக்கைகளைக் காட்டி குழந்தையுடன், முன்னா விளையாடியுள்ளார். நிகழ்ச்சி முடியும் தருவாயில், யாரும் பார்க்காத போது குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றுள்ளார். அந்தக் குழந்தை, ‘எங்க தூக்கிப்போறீங்க மாமா. அம்மா அங்க இருக்காங்க’ என்று விபரீதம் அறியாமல் பேசியுள்ளது. அதற்கு, ‘மாமா உனக்கு ஐஸ்கிரீம், சாக்லெட் எல்லாம் வாங்கித்தருகிறேன்’ என ஆசை வார்த்தைகளைக் கூறி வேகமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான் கொடூரன். வீட்டிற்குச் சென்றதும், குழந்தையை இரக்கமின்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பெற்றோர் குழந்தையைக் காணவில்லை என தேடி அலைந்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினரிடமும் புகார் அளித்துள்ளனர். அந்தக் கொடூரன் 2 நாட்கள் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இரண்டு நாட்களுக்குப் பின்னர் அந்தச் சிறுமியை அழைத்துக்கொண்டு சென்று சாலையோரம் விட்டுவிட்டுச் சென்றுள்ளான். குழந்தை பெற்றோரிடம் சென்றடைந்து, நடந்தவற்றை கண்ணீர் மல்க கூறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உடனே காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். விரைந்து சென்ற காவல்துறையினர் கொடூரன் முன்னாவை கைது செய்து, அவர்மீது குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.