தாயும், தோழியும் கைது
தாயும், தோழியும் கைது pt desk

மேட்டுப்பாளையம்: சிறுவர்களை அடித்து துன்புறுத்தியதாக தாயும், தோழியும் கைது

மேட்டுப்பாளையம் அருகே சிறுவர்களை அடித்து துன்புறுத்திய தாய் மற்றும் அவரது தோழி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: இரா.சரவணபாபு

கோவை மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் பணிபுரிந்து வருபவர் பரமேஸ்வரி. இவரது அலுவலகத்திற்கு தொலைபேசியில் அழைத்த ஒருவர் காரமடை அடுத்த தோலம்பாளையம்புதூர் ஜே.ஜே.நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுல் இரு பெண்கள் அந்த வீட்டில் உள்ள சிறுவர்களை அடித்து துன்புறுத்துவதாக தகவல் கொடுத்துள்ளார்.

Police station
Police stationpt desk

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரி மற்றும் களப்பணியாளர் ரெபினா ஆகியோர் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த இரு சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டினுள் அவர்களது தாய் மஞ்சு மற்றும் அவரது தோழி பிரியங்கா ஆகியோர் உள்ளனர் என்றும், அவர்கள் இருவரும் இரண்டு சிறுவர்களையும் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வருவதும் தெரியவந்தது.

தாயும், தோழியும் கைது
இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்து: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

இதையடுத்து இரு சிறுவர்களையும் மீட்டு காரமடை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, பரமேஸ்வரி புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்களை அடித்து துன்புறுத்திய மஞ்சு மற்றும் அவரது தோழி பிரியங்கா ஆகியோரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com