”காவல்துறை விசாரணையின் போது இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்தால் இனிமேல் 15 லட்சம் இழப்பீடு வழங்கணும் ”

”இயற்கைக்கு மாறாக காவல்துறை மரணங்கள் நிகழ்ந்தால் அவர்களுக்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்" - மேகாலயா உயர்நீதிமன்றம்.
மேகாலயா உயர்நீதி மன்றம்
மேகாலயா உயர்நீதி மன்றம்PT

காவல்துறை விசாரணையின் போது இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்தால் இனிமேல் 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மேகாலயா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2012ம் ஆண்டு மேகாலயா மாநிலத்தில் காவல்துறை விசாரணையில் நடந்த 53 மரணங்களின் 25 மரணங்கள் இயற்கையானவை என்றும் 28 மரணங்கள் இயற்கைக்கு மாறானவை என சமீபத்தில் கண்டறியப்பட்ட நிலையில், மேகாலயா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டது.

இவ்வழக்கில், தீர்ப்பு வழங்கிய மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, "வயது முதிர்வு மற்றும் இதர சில காரணங்களால் காவல்துறை விசாரணையின் போது ஒருவர் இயற்கைக்கு மாறாக மரணமடைவதை தடுக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் அரசுக்கு மிகப்பெரிய அவதூறு. இயற்கைக்கு மாறாக காவல்துறை மரணங்கள் நிகழ்ந்தால் அவர்களுக்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்" என தீர்ப்பு வழங்கினார் .

அதன்படி, "45 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும், 30 முதல் 40 வயது வரை இருந்தால் 12 லட்சம் இழப்பீடு எனவும் 30 வயதிற்கு கீழ் இருந்தால் 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என மேகாலயா உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, காவல்துறை மரணங்களுக்கு 7.5 லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடு தொகை வழங்க முடியும் என நீதிமன்றத்தில் மேகாலய அரசு கூறியிருந்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com