\
பட்டியலினத்தவர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது

பட்டியலினத்தவர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது

பட்டியலினத்தவர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது
Published on: 

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக வீடியோ பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டார்.

மாடல் அழகியாக இருந்து நடிகையானவர் மீரா மிதுன். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இவர் அண்மையில் பட்டியலின சமூகத்தினரை இழிவாக பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் கொடுத்திருந்தது. இன்று காலை 10 மணிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் நடிகை மீரா மிதுன் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. அதனைத்தொடர்ந்து தற்போது மீரா மிதுன் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே நடிகர் நடிகைகளை அவதூறாக பேசியது மற்றும் கொலைமிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர்மீது புகார்கள் எழுந்திருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com