”அன்று வாக்குவாதம் முற்றிவிட்டது” மருத்துவ மாணவியை கொன்ற மருத்துவர் பகீர் வாக்குமூலம்

”அன்று வாக்குவாதம் முற்றிவிட்டது” மருத்துவ மாணவியை கொன்ற மருத்துவர் பகீர் வாக்குமூலம்

”அன்று வாக்குவாதம் முற்றிவிட்டது” மருத்துவ மாணவியை கொன்ற மருத்துவர் பகீர் வாக்குமூலம்
Published on

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் 25 வயது மருத்துவ மாணவியை கழுத்தை நெரித்துக் கொன்ற மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆக்ராவிலிருந்து முதுகலை மருத்துவம் படித்த மாணவியை செவ்வாய்க்கிழமை மாலை முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர், பிறகு அவரது உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

டெல்லியைச் சேர்ந்த 25 வயது மருத்துவ மாணவி தனது கல்லூரியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆக்ராவில் புதன்கிழமை காலை இறந்து கிடந்தார். அம்மாணவியை கொன்றதாக அவரது குடும்பத்தினரால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டு அவர் தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் விவேக் திவாரி, மாநில தலைநகர் லக்னோவிலிருந்து 220 கி.மீ தூரத்தில் உள்ள ஜலான் நகரில் பணிபுரிந்தார். தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் போலீசாரிடம் "செவ்வாயன்று, மாலை 6:30 மணியளவில் ஜலானில் இருந்து அவளை சந்திக்க வந்தேன். கடந்த ஏழு ஆண்டுகளாக நாங்கள் ஒரு உறவில் இருந்தோம், நாங்கள் கடைசியாக சந்தித்தபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது, அதனால் நான் கோபமடைந்து அவளின் கழுத்தை நெரித்துக் கொன்றேன், பின்னர் அவளை கத்தியால் குத்தினேன்"என்று கூறினார்.

கடந்த சில வாரங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநிலத்தில் நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. திங்களன்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது பேஸ்புக் பதிவில், "பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு முற்றிலும் தவறிவிட்டது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com