\
மயிலாடுதுறை: இடத்தகராறில் தம்பிகளால் அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்

மயிலாடுதுறை: இடத்தகராறில் தம்பிகளால் அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்

மயிலாடுதுறை: இடத்தகராறில் தம்பிகளால் அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

மயிலாடுதுறை அருகே பங்காளிகளுக்கு இடையே ஏற்பட்ட இடத்தகராறில் அண்ணனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த தம்பிகளை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் பக்கிரியா பிள்ளை தெருவைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் வைத்தியநாத சாமி (40). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும் இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் சித்தப்பா மூர்த்தி என்பவரின் மகன்களான திவாகர் (32), தினேஷ் (34) ஆகியோருக்கும் இடையே இடப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மூவலூர் கடைவீதியில் நின்று கொண்டிருந்த திவாகர் மற்றும் தினேஷ் ஆகியோரிடம் வைத்தியநாத சாமி மதுபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த திவாகர் அருகிலிருந்த இரும்பு வாறுகோலால் வைத்தியநாத சுவாமியின் தலையில் பலமாக அடித்துள்ளார்.

இதில், நிலைகுலைந்து போன வைத்தியநாத சாமியை தலையில் ரத்தம் சொட்ட சொட்ட மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அப்போது மயங்கிய அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச ;செல்லப்பட்டது. சம்பவம் அறிந்த குத்தாலம் போலீசார் வைத்தியநாத சாமியை கம்பியால் தாக்கிய திவாகர் மற்றும் தினேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com