பெண் மர்ம மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: அடிக்கடி செல்போனில் பேசியதால் கொலை!

பெண் மர்ம மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: அடிக்கடி செல்போனில் பேசியதால் கொலை!

பெண் மர்ம மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: அடிக்கடி செல்போனில் பேசியதால் கொலை!
Published on

சீர்காழி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, தொடர்ந்து செல்போனில் மற்றவரிடம் பேசியதால் அண்ணனே கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமானது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் பீச் தெருவில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 2 மகன்களும், கலைஅழகி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கலைஅழகி (26). பிசிஏ படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து பெருந்தோட்டத்திற்கு வந்து தனது வீட்டில் இருந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி காலை கலைஅழகியின் தாய் தமிழ்ச்செல்வி, வைத்தீஸ்வரன் கோவிலில் நடந்த உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்று விட்டார் வீட்டில் கலைஅழகி மட்டும் தனியாக இருந்துள்ளார்.


திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த தமிழ்ச்செல்வி, மகள் கலைஅழகி உடலில் காயங்களுடன இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கலை அழகி உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


போலீஸ் விசாரணையில் சம்பவத்தன்று கலைஅழகி செல்போனில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை அவரது பெரியப்பா மகன் ரகு (30) என்பவர் பார்த்துவிட்டு யாருடன் தொடர்ந்து போன் பேசிவருகிறாய் என கேட்டு அடித்துள்ளார். இதற்கு கலைஅழகி நீ என்ன கேட்பது உன் வேலையை பார் எனக்கூறி அவரும் திருப்பி தாக்கியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ரகு கலை அழகியை அடித்து உதைத்து வீட்டில் கிடந்த செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெருக்கி கலை அழகியை ரகு கொலை செய்துள்ளார். தற்போது ரகுவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com