Police station
Police stationpt desk

மயிலாடுதுறை | 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்ணன் தம்பி கைது

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சகோதரர்கள் இருவரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரை சகோதரர்களான அபிமன்யு, முத்தரசன் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் ஆய்வாளர் சுகந்தி சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

arrest
arrestPT DESK
Police station
தஞ்சை | சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக் கொலை - பழிக்குப் பழியாக நடைபெற்ற கொலை என தகவல்

இதைத் தொடர்ந்து சகோதரர்கள் அபிமன்யு, முத்தரசன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com