\
முன்விரோதத்தால் நேர்ந்த கொடூரம் - தம்பியால் அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்!

முன்விரோதத்தால் நேர்ந்த கொடூரம் - தம்பியால் அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்!

முன்விரோதத்தால் நேர்ந்த கொடூரம் - தம்பியால் அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்!
Published on

மயிலாடுதுறை அருகே மது போதையில் அண்ணனை கடப்பாரையால் அடித்துக் கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பனங்காட்டு தெருவைச் சேர்ந்த குமார் (44) மற்றும் அவரது தம்பி வீராச்சாமி (41) ஆகிய இருவரும் கொத்தனார் வேலை பார்த்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே குடும்பத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், இவர்கள் இருவரும் சித்தர்காடு கலைஞர் நகர் சம்பந்தம் குளம் பகுதியில் வசிக்கும் வினோத் என்பவர் வீட்டில் மூவரும் சேர்ந்து நேற்றிரவு மது அருந்தியுள்ளனர். அப்போது குமார் மற்றும் அவரது தம்பி வீராச்சாமி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், மதுபோதையில் இருந்த தம்பி வீராச்சாமி தனது அண்ணன் குமாரை சென்டரிங் வேலைக்கு பயன்படுத்தும் கடப்பாறையால் தலையில் தாக்கியதில் குமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் குமாரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து குமாரின் மனைவி ராதிகா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வீராசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுபோதையில் தம்பி அண்ணனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com