\
கஞ்சா போதையில் தகராறு - கோயில் திருவிழாவில் பரபரப்பு

கஞ்சா போதையில் தகராறு - கோயில் திருவிழாவில் பரபரப்பு

கஞ்சா போதையில் தகராறு - கோயில் திருவிழாவில் பரபரப்பு
Published on: 

மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டியில் கோயில் திருவிழா கூட்டத்தில், கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த இளைஞர்கள் ஆயுதங்களுடன் புகுந்து தாக்கத் தொடங்கியதால் பதற்றம் நிலவியது.

திருமங்கலம் அருகே T.கல்லுப்பட்டியில் உள்ள புதுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக, பலவேடம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் விதவிதமான வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஊர்வலம் தென்காசி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கூட்டத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

கோயில் நிர்வாகிகள் அவர்களைக் கண்டித்தபோது, ஆத்திரமுற்ற ஓர் இளைஞர், அரிவாளை எடுத்து கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி வீசத் தொடங்கினார். இதனால் ஊர்வலத்தில் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர், அந்த இளைஞர்களைப் பிடித்துச் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com