4 வாகனங்களுக்கு தீ வைத்த மாவோயிஸ்டுகள்

4 வாகனங்களுக்கு தீ வைத்த மாவோயிஸ்டுகள்

4 வாகனங்களுக்கு தீ வைத்த மாவோயிஸ்டுகள்
Published on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே சாலை அமைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்களை மாவோயிஸ்டுகள் தீ வைத்து எரித்ததாக புகார் எழுந்துள்ளது. 

ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஜி.மடகுள மண்டலம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஜே.சி.பி வாகனங்களையும், அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாக்கப்பள்ளி அருகே 2 பொக்லைன் இயந்திரங்களையும் பெட்ரோல் ஊற்றி மாவோயிஸ்டுகள் எரித்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆந்திரா - ஒடிசா எல்லை பகுதியில் இருமாநில போலீசாரும் இணைந்து நடத்திய என்கவுண்டரில் 20க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு அப்பகுதி அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் மாவேயிஸ்டுகளின் செயல் அப்பகுதி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com