“பாட்டி லிப்ட் கொடுக்கவா?”.. உதவி செய்வதுபோல் நாடகமாடி மூதாட்டியிடம் தங்க நகைகள் பறிப்பு

“பாட்டி லிப்ட் கொடுக்கவா?”.. உதவி செய்வதுபோல் நாடகமாடி மூதாட்டியிடம் தங்க நகைகள் பறிப்பு
“பாட்டி லிப்ட் கொடுக்கவா?”.. உதவி செய்வதுபோல் நாடகமாடி மூதாட்டியிடம் தங்க நகைகள் பறிப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் அருகே உதவி செய்வதுபோல் நாடகமாடி மூதாட்டியை ஸ்கூட்டரில் கடத்திச்சென்று 3 பவுன் செயின் பறித்துச் சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட், உத்தமர்கோவில் பகுதியை சேர்ந்தவர் 73 வயதான மூதாட்டி நளினி வசந்தா. இவரது மகன்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நளினி வசந்தா தனது வீட்டில் இருந்த பழுதடைந்த மிக்ஸியை சரி செய்ய அருகில் உள்ள  கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த மர்ம ஒருவர் மூதாட்டியிடம்  கடைக்கு ஸ்கூட்டரில் அழைத்துச்செல்வதாக கூறி உதவி செய்வதுபோல் நாடகமாடியுள்ளார். இதனை நம்பிய அப்பாவி மூதாட்டி ஸ்கூட்டரில் ஏறி சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்றதும் வழியில் நின்ற மற்றொரு மர்ம நபர் சட்டென்று ஸ்கூட்டரில் மூதாட்டியின் பின்னால் அமர்ந்ததும் ஸ்கூட்டர் சேலம் சாலையில் உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலம் வழியாக 2 கிலோமீட்டர் தூரம் ஸ்கூட்டரில் மூதாட்டியை கடத்தி சென்ற மர்ம நபர்கள், நொச்சியம் இரட்டை மண்டபம் பகுதியில் யாரும் இல்லாத இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்தி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துவிட்டு அவரை சாலையோரத்தில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
 

மூதாட்டி அவ்வழியாக வந்தவர்களிடம் நடந்த சம்பவங்களை கூறவும், சம்பவம் குறித்து மண்ணச்ச நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் மூதாட்டியை ஏமாற்றி கடத்திச்சென்று செயினை பறித்துவிட்டு சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிக்கலாம்: ஆபாசமாக சித்தரித்த புகைப்படம்.. ஆன்லைன் கடன் கும்பலின் அட்டுழியத்தால் இளைஞர் தற்கொலை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com