குற்றம்
சிசிடிவி காட்சிகளை வைத்து மின் மோட்டார் திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த காவல்துறை
சிசிடிவி காட்சிகளை வைத்து மின் மோட்டார் திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த காவல்துறை
திருவாரூரில் மின் மோட்டார் திருடியவரை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் பேபி டாக்கி சாலையில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மின்சாதனங்கள் பழுதுபார்க்கும் கடையில் ஆளில்லாத நேரத்தில் கடைக்கு சரிசெய்யப்பட வந்த மின்மோட்டார் ஒன்றை கைலிக்குள் மறைத்து வைத்து ஒருவர் திருடி செல்லும் காட்சி சிசிடிவியல் பதிவானது.
இதை ஆதாரமாக வைத்துக்கொண்டு கடை உரிமையாளர் செல்வா, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட சந்திரசேகர் (வயது 51) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.