\
ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 7 மாத குழந்தை கடத்தல் - டிப் டாப் நபரை தேடும் போலீஸ்!

ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 7 மாத குழந்தை கடத்தல் - டிப் டாப் நபரை தேடும் போலீஸ்!

ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 7 மாத குழந்தை கடத்தல் - டிப் டாப் நபரை தேடும் போலீஸ்!
Published on

ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் இருந்து 7 மாத குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா ரயில் நிலைய மேடையில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை, அந்த வழியாக பேண்ட் - சட்டை அணிந்து 'டிப்டாப்'பாக வந்த நபர் ஒருவர் அக்கம்பக்கம் நோட்டமிட்டு, அந்த குழந்தையை அங்கிருந்து தூக்கிக்கொண்டு வேகமாக சென்றார்.

சிறிதுநேரத்தில் அந்த தாய் எழுந்து பார்த்தபோது பக்கத்தில் படுத்திருந்த தனது குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தையை தூக்கிச்செல்லும் வீடியோ ரயில் பிளாட்பாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையை திருடி சென்றவரை தேடி வருகின்றனர். மேலும் குழந்தையை கடத்திச் சென்றவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார்,  அந்நபர் பற்றிய தகவல் கிடைத்தால் தங்களிடம் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com