கேரளா: மருத்துவக்கல்லூரி மாணவியை துப்பாக்கியால் சுட்டுகொன்று இளைஞர் தற்கொலை

கேரளா: மருத்துவக்கல்லூரி மாணவியை துப்பாக்கியால் சுட்டுகொன்று இளைஞர் தற்கொலை

கேரளா: மருத்துவக்கல்லூரி மாணவியை துப்பாக்கியால் சுட்டுகொன்று இளைஞர் தற்கொலை
Published on

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணை கொலை செய்துவிட்டு, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி இந்திராகாந்தி பல்மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு பயின்றுவந்த மானசாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராகில் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவருடன் தொடர்ந்து பழக விரும்பாத மானசாவுக்கு, ராகில் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.

இந்தநிலையில், கொச்சி சென்ற ராகில், மானசாவை தான் தங்கியிருந்த அறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மானசாவை சுட்டுக் கொன்று, ராகிலும் தற்கொலை செய்துகொண்டார். தலசேரியை சேர்ந்த ராகில், மானசாவை கொல்லும் நோக்கத்தோடே கொச்சியில் அறையெடுத்து தங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com