குற்றம்
உமிழ்நீரை துப்பி சப்பாத்தி சுட்ட சமையல் மாஸ்டர் கைது! நோய்த்தொற்றை பரப்ப சதி?
உமிழ்நீரை துப்பி சப்பாத்தி சுட்ட சமையல் மாஸ்டர் கைது! நோய்த்தொற்றை பரப்ப சதி?
உமிழ்நீரை துப்பி, இளைஞர் ஒருவர் சப்பாத்தி சுடும் வீடியோ வைரலாக பரவிவந்த நிலையில், சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், தந்தூரி முறையில், சப்பாத்தி சுடும் இளைஞர் ஒருவர், அடுப்பில் வைப்பதற்கு முன், சப்பாத்தியின் மீது உமிழ்நீரை துப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனையடுத்து, மீரட் நகர போலீசார் இதுதொடர்பாக, புகாரினை தாமாகவே பதிவு செய்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட சமையல் மாஸ்டரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மீரட் பகுதியை சேர்ந்த நவுஷத் அகா சோஹைல் என்பது தெரியவந்துள்ளது. நோய்த்தொற்றை பரப்புவதற்காக சப்பாத்தி மீது எச்சிலை துப்பினாரா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.